Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 1, 2017

ஆயிரம் கோடி தர்றியா சொல்லு உன் கூட வறேன்: பேராசைக்காரி தீபா; அலறி ஓடிய பன்னீர்


ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சில தினங்களுக்கு முன்னர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை உருவாக்கி தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார்.
அன்றைய தினமே தனது பேரில் ஆரம்பித்த அந்த பேரவையின் கொடியையும் அறிமுகம் செய்தார் தீபா.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி ஒரே அணியில் சசிகலாவின் பின்னால் நின்றதை விரும்பாத தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு ஆதரவு வழங்கினர்.
அதன் பின்னர் சசிகலாவுடன் இருந்த ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கி தனியாக வந்த பின்னர் பெரும்பாலான தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் வந்தனர்.
ஆனாலும் தீபாவுக்கு குறிப்பிட்ட தொண்டர்கள் ஆதரவு அளித்து தான் வந்தனர்.
இந்நிலையில் ஓபிஎஸும் தீபாவும் ஜெயலலிதாவின் சமாதியில் சந்தித்தனர். பின்னர் ஓபிஎஸ் தனது வீட்டிற்கு தீபாவை அழைத்து சென்று ஆரத்தி எடுத்து வரவேற்று நல்ல மரியாதை அளித்தார்.
அப்போது பேசிய தீபா தான் ஓபிஎஸுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தார். ஆனால் பின்னர் அதில் இருந்து விலகி புதிய பேரவை ஒன்றை தொடங்கி, ஓபிஎஸுடன் கூட்டணி இல்லை என தனியாக செயல்பட ஆரம்பித்துள்ளார்.
தீபாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் ஓபிஎஸ் அணியிடம் தான் வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லையாம்.அதாவது ஆயிரம் கோடி ரூபாய் டிமான்ட் வைத்துள்ளார்.உங்களிடம் தான் இருகிறதே கொடுங்க. என்று பகிரங்கமாகவே கேட்டுள்ளார்.
அரசியலில் இப்போது தான் குதித்துள்ள தீபாவின் இந்த ஆசை ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
இதனால் தீபாவின் ஆசைக்கு தடை போட்டதாகவும், அதனால் தான் தீபா தனியாக சென்று தனது பெயரிலேயே பேரவையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.