March 11, 2017
உ.பி.,யில் நம்பிக்கை தகர்ந்தது; சோகத்தில் அகிலேஷ்
உ.பி.,யில் சமாஜ்வாதி தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவராக இருந்த முலாயம் அறிவித்திருந்தார். ஆனால், பின்னர் கட்சியை கைப்பற்றிய அவரது மகன் அகிலேஷ் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்து வந்தார். இதற்காக ராகுலும், அகிலேசும் சேர்ந்த பல இடங்களில் பேரணியில் கலந்து கொண்டனர். தேர்தல் கருத்து கணிப்பு பா.ஜ.,வுக்கு சாதகமாக வந்த போதும், இதனை ஏற்க இருவரும் மறுத்தனர். ஆனால், ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் அவர்களது நம்பிக்கை தகர்ந்தது. ஆரம்பம் முதலே பா.ஜ., முன்னிலை பெற்றது. சமாஜ்வாதி கூட்டணி 100 இடங்களை கூட தாண்டாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அகிலேஷ் மற்றும் அவரது கட்சி தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
உ.பி.,யில் நம்பிக்கை தகர்ந்தது; சோகத்தில் அகிலேஷ்
Reviewed by மறத்தமிழன்
on
March 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.