நாட்டிற்காக உயிரையே கொடுக்க வந்த ராணுவ வீரர் ஒருவரை அவரது உயர் அதிகாரி நாயை வாக்கிங் அழைத்துச் செல்ல வைத்துள்ளார்.
தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவரச் சொல்லியுள்ளார். இதுபற்றி ஒரு இணையதளம் புலனாய்வு நடத்தியுள்ளது.
அதில் முகத்தை மறைத்தவாறு உண்மைகளை சொல்லியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த மேத்யூ. கடந்த 25 ஆம் தேதி இந்த வீடியோ வெளியாகி 24 மணி நேரத்திற்குள், ராய் முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்துக் கொண்டதாக பதிவு செய்யப்படுகிறது.
தங்களை அம்பலப்படுத்தியவர் ராய் தான் என்பதை உயர் அதிகாரிகள் கண்டு கொள்கின்றனர். இந்நிலையில் ஒரு படைப்பிரிவு தளத்தில் ராயின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்படுகிறது.
அவரது டைரியில் ராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்கு பதிலாக சாவதே மேல் என எழுதப்பட்டுள்ளது. அதே நேரம் அவர் தற்கொலை செய்வதற்கு வாய்பில்லை, கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கூறியதால், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
உடலில் வேறு எங்கும் காயம் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கை கூறியுள்ளதால், கொலையா, தற்கொலையா என்ற முடிவு தெரியாமல் குடும்பத்தினர் விரக்தியில் உள்ளனர். காவல்துறை விசாரித்து வருகிறது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ படைப்பிரிவு தளத்தில் நடைபெற்றவை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.