March 11, 2017
பொன்னார் கருத்தை ஏற்க மறுத்த மீனவர்கள் - போராட்டம் தொடர்கிறது...!
இலங்கை கடற்படை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதியை ஏற்க மீனவர்கள் மறுத்து விட்டனர். மேலும் தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் 5-வது நாளாக மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தங்கச்சிமடம் போராட்டக்களத்துக்கு நேரில் சென்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீனவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர், 'பாஜக ஆட்சிக் காலத்தில் தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையில் தாக்குதல் கட்டுக்குள் இருந்தது. நவம்பர் மாதம் நடந்த இருநாட்டு மீனவர்கள் கூட்டத்தின் போது தமிழக மீனவர்கள் மீது எக்காரணம் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என்று எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கப்பட்டது' என்றும் விளக்கம் அளித்தார். மேலும் அவர், ' மீனவர்கள் பிரச்னையில் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கை அரசு நம்முடைய ஒப்பந்தத்தை மீறிவிட்டது. இதுகுறித்து மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். எனவே உடலை அடக்கம் செய்ய முன்வாருங்கள்' என்றும் தெரிவித்தார்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதியை ஏற்க மறுத்தனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி
பொன்னார் கருத்தை ஏற்க மறுத்த மீனவர்கள் - போராட்டம் தொடர்கிறது...!
Reviewed by மறத்தமிழன்
on
March 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.