Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 8, 2017

இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!!!


நடராசருக்கு மட்டும் அல்ல
நம் வீட்டு பெண்களுக்கும் -தான் 
பத்து கைகள் ;
தினம் தினம் ஒரு 
பரதம் அரங்கேற்றம் செய்கிறாள் 
வீட்டு அறைகளிலே ; 
பெண்ணாக பிறந்த குற்றம் 
ஒன்றுக்காக -அவள் 
அனுதினம் அனுபவிக்கிறாள் 
சிறை தண்டணை ..!!! 

வீட்டில் 
இருக்கும் பெண்ணுக்கு 
வீடே சிறை-வீட்டை விட்டு 
வெளியே செல்லும் பெண்ணுக்கோ 
செல்லும் இடமெல்லாம் 
வேலி இல்லா சிறை; 
காட்சி பொருளாய் பெண்ணை 
காட்சி படுத்தி, அவளும் 
இரத்தம், சதை கொண்ட உடல் 
என்பதை மறந்து, வேலியில் 
விழுந்த சேலை போல் சீரழிக்கபடுகிறாள்..!!!  

பெண் என்பவள் 
வாழை மரம் போல் 
தன்னை வெட்டுபவர்களுக்கும் 
இலகாகுவாள் ; தன்னை 
கட்டுபவர்களுக்கும் இலகாகுவாள் 
சிரிக்கிறாள் என்பதற்காக 
பெண்ணை ச்சீ ...என்காதீர்கள் 
மொறைக்கிறாள் என்பதற்காக 
அவளை மோசக்காரி என்காதீர்கள் 
ஒவ்வொரு பெண்ணிலும் 
ஒரு அன்னை தெரசா 
ஒரு கிளியோபாட்ரா -க்கள் 
இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள்..!!! 

தென்னை எத்தனை
உயரம் வளர்ந்தாலும் -அது 
ஒரு புல் இனமே,
பெண்மை எத்தனை
கடினமானவள் என்றாலும் 
அவள் ஒரு பூ இனமே ...,,, 
கண்ணாக 
மதிக்கப்பட வேண்டிய பெண்கள் 
மண்ணாக மிதிக்கப்படும் போதுதான் 
இரணமாகிறது மனமே ..!!! 

நாட்டில் 
மண்ணும் காக்க பட வேண்டும் 
பெண்ணும் 
காக்க பட வேண்டும் ...!!! 
                     
புரட்சி கவிஞர் நிலா பிரியன்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.