கனடா நாட்டில் பெற்ற மகளை எரித்து கொன்ற தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கனடாவில் உள்ள கல்கேரி நகரில் Laura Coward என்ற தாயார் தனது 9 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
கணவனுடன் விவாகரத்து பெற்று விட்டதால் மகள் யாருடன் வசிக்க வேண்டும் என பிரச்சனை எழுந்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பெற்ற மகளை கொலை செய்ய தாயார் முடிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காரில் படுக்க வைத்துள்ளார்.
பின்னர், கார் மீது எரிபொருளை ஊற்றிய தாயார் தீவைத்து எரித்து சாம்பலாக்கியுள்ளார். மேலும், இவ்விவகாரம் வெளியே தெரிவதற்குள் மகளை காணவில்லை என பொலிசாரிடம் புகாரும் அளித்துள்ளார்.
ஆனால், பொலிசார் நடத்திய அதிரடி விசாரணையில் மகளின் எரிந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டு தாயார் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தபோது ‘எதிர்பாராத விபத்து காரணமாக மகள் இறந்துவிட்டார். என் மீது கருணை காட்டுங்கள்’ என தாயார் நீதிபதியிடம் மன்றாடியுள்ளார். ஆனால், தாயாரின் வாதத்தை நீதிபதி முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
’சுயநலத்திற்காக பெற்ற மகளை இரக்கமின்றி கொலை செய்தது மன்னிக்க முடியாது குற்றம். இதற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’ தந்தை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது, மகளை தாயார் தீயிட்டு கொலை செய்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், அடுத்த 18 ஆண்டுகளுக்கு பரோலில் வெளியே செல்ல தாயாருக்கு தடை விதிப்பதாக கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.