Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 1, 2017

திருநங்கை என தெரிந்தும் மணந்த காதலன், மனதை உருக்கும் காதல் கதை!


காதலுக்கு கண்களில்லை என்பார்கள். காதலுக்கு எல்லையும் இல்லை. இதோ! முதல் திருநங்கை திருமணத்திற்கு இந்தியா சாட்சியாக அமைந்துள்ளது. இதுபோன்ற காதல் திருமணம் அழகை தாண்டிய ஒரு நிகழ்வு.
இதோ, மும்பையில் நடந்த இந்தியாவின் முதல் திருநங்கை திருமண தம்பதியின் ரொமாண்டிக் புகைப்படங்கள்...


இந்தியாவில் இதுவே முதல் திருநங்கை திருமணம் ஆகும். மாதுரி மற்றும் ஜே ஷர்மா இருவரும் தங்களில் ஒருவர் திருநங்கை என்பதை வெளிப்படையாக கூறி திருமணம் செய்துக் கொண்டனர்


பிரபல புகைப்பட கலைஞி அனு பட்நாயக் இந்த அற்புத காதல் கதையை படம்பிடிக்க விரும்பினார். அதற்கு அந்த தம்பதியினரும் ஒப்புக் கொண்டனர்.


அனு அந்த தம்பதிகளுடனே தங்கி இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார். சில நாட்கள் அவர்களுடன் தங்கி லைவ்லியான முறையில் படங்களை எடுத்துள்ளார் அனு.


இது குறித்து அனு கூறுகையில், ' நான் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கமான தருணங்களை படமெடுக்க எண்ணினேன். காதலுக்கு பாலினமும் தடையல்ல, எந்தவிதமான எல்லையும் இல்லை என்பதை இந்த உலகிற்கு காண்பிக்க விரும்பினேன்.' என கூறியுள்ளார்.


மேலும், அனு இந்த தம்பதியிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.


மாதுரி மீதான ஜேவின் காதல் மிகவும் ஆழமானது. அது தான் இந்த தம்பதியை தனித்துவமாக சிறப்பாக உணர வைக்கிறது.

மாதுரியை தங்கள் இனத்தை சேர்ந்தவர்களை திருமண சான்றிதழ் பெற தூண்டுவதற்கு போராடுவதற்கு தைரியத்தை அளித்துள்ளது இந்த திருமணம். அதற்கு காரணம் ஜே. ஜேவின் காதல் தான் மாதுரியின் தைரியம்.

இந்த உலகம் இந்த தனித்துவமான காதலை உணர வேண்டும், காண வேண்டும் என எண்ணிய அனு பட்நாயக்கிற்கு தனி பாராட்டுகளை அளித்தே ஆகவேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.