இந்நிலையில் பன்னீர் கூட்டத்திற்கு போட்டியாக எடப்பாடி பழனிச்சாமி, ஜெ.,பிறந்ததின பொது கூட்டம் மார்ச் 11ம் தேதி நடத்த திட்டமிட்டார். அதற்காக போலீஸில் அனுமதி கோரப்பட்டது.
பன்னீர்செல்வம் அணியினர் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்த போஸ் மைதானத்தில், பழனிச்சாமி அணியினர் கூட்டம் நடத்துவதற்கு மாநகராட்சியில் வாடகை தொகை உள்பட செலுத்தப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்டத்தில் அதிக அளவில் எதிர்ப்பு இருப்பதால் பொதுக்கூட்டத்திற்கு அதிக அளவில் கூட்டம் வராது என உளவுத்துறை அறிக்கை கொடுத்தது.
அதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரை காரணம் காட்டி முதல்வர் தரப்பில் சேலத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து பழனிச்சாமி அணியினர் நடத்த இருந்த கூட்டத்தை ரத்து செய்தனர்.
முதல்வர் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், பன்னீர் தரப்பில் 12ம் தேதி கூட்டம் நடத்த அனுமதி அளிப்பதில் சிக்கல் இருக்காது என தெரிகிறது. கூட்டம் நடத்த எம்.எல்.ஏ.,செம்மலை தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.