March 9, 2017
மீனவர்களை சிறை பிடிக்க ஐடியா சொன்னதே சு.சாமிதான்.. மீனவ பிரதிநிதி போடும் புது குண்டு
இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்து கொண்டு இருந்த போது சிங்கள ராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது:தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கவும், படகுகளை கைப்பற்றவும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியதே சுப்பிரணிமணியன் சுவாமி தான் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 140 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு 800க்கும் அதிகமான மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.தற்போது மீனவர் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்ததை தொடர்ந்து இரண்டு நாட்களாக மீனவர்கள் பல போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராகவும், மீனவர்களின் வாழ்வாதரத்தை முடக்கிய குற்றத்திற்காகவும், தமிழர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும் என்றார்
மீனவர்களை சிறை பிடிக்க ஐடியா சொன்னதே சு.சாமிதான்.. மீனவ பிரதிநிதி போடும் புது குண்டு
Reviewed by மறத்தமிழன்
on
March 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.