Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 1, 2017

குடும்ப நிகழ்ச்சிபோல மாறிப்போன நெடுவாசல் போராட்ட களம்.. வருவோருக்கெல்லாம் உணவு, உபசரிப்பு ஜோர்


புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாள்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும், உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
விவசாயத்தையும், தங்கள் வாழ்வாதாரத்தையும் காத்துக் கொள்ள இறுதி வரை போராடுவதாக தெரிவிக்கின்றனர். இந்த மக்களுக்கு மாணவர்கள், தமிழ் அமைப்புகள், திரைத்துறையினர், வணிகர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.
பூமிக்கடியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல், கோட்டைக்காடு உள்ளிட்ட 6 கிராமங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. எனினும மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான கிணறுகள் என்பதை கிராம மக்கள் அறியவில்லை.
தற்போது கடந்த 15 நாள்களுக்கு முன்பு நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அப்போது பொங்கி எழுந்த மக்கள் முக்கனிகள் விளையும் தங்கள் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி கடந்த 14 நாள்களாக போராடி வருகின்றனர்.
இந்த மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவளித்து மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர். புதுக்கோட்டை மக்களுக்கு அண்டைய மாநிலங்களில் இருந்து மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சினை போல் இதையும் தமிழர்களின் பிரச்சினையாக பாவித்து போராட்ட களத்துக்கு சாரை சாரையாக மக்கள் கூட்டம் வந்தவண்ணம் உள்ளனர்.
விவசாயத்தைக் காக்க முழு வீச்சில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள நெடுவாசல் நோக்கி வரும் மக்களை அன்புடன் உபசரித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு சுடசுட உணவு தயாரிக்கும் பணியை கிராமத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். கிராம மக்களின் அன்பை பார்க்கும் போது இது போராட்டமா? அல்லது குடும்ப விழாவா? என்று குழம்பும் நிலை ஏற்படுகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மற்ற இடங்களைக் காட்டிலும் தங்கள் பகுதி பெரிதும் நிலை ஏற்படும் என்ற அச்சம் கொண்ட கோட்டைக்காடு கிராமத்தினர் தற்போது 4-ஆவது நாளாக போராடி வருகின்றனர். போராட்ட களத்துக்கு சாரை சாரையாக வரும் மக்களையும் வாகனப் பேரணி நடத்தும் இளைஞர்களையும் ஆங்காங்கே போலீஸார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
மக்கள் கூடுவதை தடுக்க மாவட்டத்தின் 7 இடங்களில் போலீஸார் சோதனை சாவடிகளை அமைத்துள்ளனர். போராட்டம் தொடங்கியபோதும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உளவுத் துறை அதிகாரிகளே தீவிர கண்காணிப்பில் பணி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது மாநில உளவுத் துறையும் போராட்டக் களத்தில் யார் யார் வருகின்றனர், வாகன பேரணியின் போது கலந்து கொள்ளும் வாகனங்கள் ஆகியவை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

போராட்டம் குறித்து சிலர் கூறுகையில், இந்த திட்டத்தால் புற்றுநோய் பாதிக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் ஊனமுடன் பிறக்கின்றனர். மேலும் தமிழகத்தை போலியோவை ஒழித்து விட்டோம் என்று மார்த்தட்டிக் கொள்ளும் அரசு இப்பகுதியில் குழந்தைகள் ஊனமாக பிறப்பது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உயிரைக் குடிக்கும் இந்த திட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.