Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 12, 2017

'இடைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவோம்...!'- ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை


தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகரின் சட்டமன்றத் தொகுதியில் இருந்துதான் போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இறந்துவிட்டதால், அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆர்.கே.நகரில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், 'ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவோம்' என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவோம்.
அந்தச் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது.' என்று கூறினார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.