Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 7, 2017

பன்றிக் காய்ச்சலை ஓட ஓட விரட்டுவதற்கான ‘பலே’ வழிகள்!


தமிழகத்தில் 1200 பேருக்கும் மேற்பட்டோர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3௦ பேர் உயிரிழந்துள்ளனர். மனோதிடத்துடன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இந்நோயை விரட்டியடிக்கலாம்.

1918ம் ஆண்டு உருவான ஹெச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உருவான பன்றிக்காய்ச்சல் சுமார் 80 லட்சம் பேரை பலி கொண்டது. இதனால் மருத்துவ அறிவியலாளர்கள் இந்த காய்ச்சலை கொள்ளை நோய் என்றே அழைத்தனர். இந்த வைரஸ் ஒருவரை தாக்கியப்பின் இந்த நோய் உடலுக்குள் மரபணு சடுதி மாற்றம் பெற்று, பின் தொற்றாக இன்னொரு மனிதனை தாக்குகிறது. எழுபத்து நான்கு நாடுகளில் இந்நோயால் இதுவரை முப்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் தமிழகத்தில் இந்த உயிர்க்கொல்லி காய்ச்சலானது மிக வேகமாகப் பரவி வருகிறது. சென்னை, திருவள்ளூர், சேலம், விழுப்புரம், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, ஈரோடு, கடலூர் மாவட்டங்களில் 1200 பேருக்கும் மேற்பட்டோர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3௦ பேர் பலியானதாக தகவல் பதிவாகியிருந்தாலும் அரசு சார்பில் 9 பேர் மட்டும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3௦௦ பேருக்கு இக்காய்ச்சலின் அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 90 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்குவை போன்று இதுவும் ஒரு பரவும் வகை காய்ச்சல் என்றாலும் நாம் மனோதிடத்துடன் சில நடவடிக்கைகளை எடுத்து இந்நோயை விரட்டியடிக்கலாம். பன்றிக்காய்ச்சல் வந்தாலும் பயப்படத் தேவையில்லை. உரிய நேரத்திற்குள் சிகிச்சை எடுப்பதன் மூலம் குணமாகக்கூடிய காய்ச்சல்தான். இக்காய்ச்ச்சலை விரட்டியடிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த பக்கத்தில் கொடுத்துள்ளோம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.