March 13, 2017
சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடல் இன்று மாலை அடக்கம்
சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் படுகொலையை கண்டித்து தங்கச்சிமடம் மீனவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற 22 வயதான மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். சிங்கள கடற்படையின் இந்த வெறிச்செயல் மாநிம் முழுவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கை கடற்படையின் தாக்குதல்களை நிறுத்தக்கோரியும் துப்பாக்கிக்சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர் பிரச்சனைக்கு தீர்வுக்கான கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்களின் போராட்டம் 7வது நாளாக நீடிக்கிறது.
இன்று மாலை அடக்கம்
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடம் மீனவர்கள் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இனறு மாலை படுகொலை செய்யப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடலை அடக்கம் செய்யவுள்ளனர்.
பிற்பகலில் கடையடைப்பு
அதனைத் தொடர்ந்து பிற்பகலில் கடையப்பு போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர். தங்கச்சிமடம் மீனவர்களுக்கு கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அடையாள வேலைநிறுத்தம்
பிரிட்ஜோ படுகொலையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 43 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 60 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
தொடர் உண்ணாவிரதம்
இதனிடையே நாகை, காரைக்கால், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொடர் உண்ணாநிலையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை அரசைக் கண்டித்தும் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
கடலில் இறங்கிப் போராட்டம்
இதேபோல் புதுச்சேரியிலும் மீனவர் பிரிட்ஜோ படுகொலையை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நல்லவாடு கிராம மீனவர்கள், பிரிட்ஜோ குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி கடலில் இறங்கி ஆர்ப்பட்டங்ம நடத்தினர்.
சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடல் இன்று மாலை அடக்கம்
Reviewed by மறத்தமிழன்
on
March 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.