March 2, 2017
நெடுவாசலில் ரொம்ப ஆழமா தோண்டத் தேவையில்லை.. 'விஞ்ஞானி' தமிழிசை விளக்கம்!
மீத்தேன் திட்டம் என்பது வேறு, ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது வேறு என செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் தமிழக பாஜக தலைவர் தமிழைசை சௌந்தராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்துப் போட்ட திமுக, இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடும் என்று கூறுவது சந்த்ர்ப்பவாதம்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயத்துக்கும் மக்களுக்கும் ஆபத்தானது என்று கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. காரணம் மீத்தேன் திட்டத்துக்கு மிக அதிக ஆழமாகக் குழி தோண்ட வேண்டும். ஆனால், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அவ்வாறு தோண்ட வேண்டிய தேவை இல்லை என்று கூறினார்.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் விஞ்ஞானிகளா என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கேட்டது, பலத்த கேலிக்குள்ளாகி வரும் நிலையில் தமிழிசையின் இந்த கருத்து சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
நெடுவாசலில் ரொம்ப ஆழமா தோண்டத் தேவையில்லை.. 'விஞ்ஞானி' தமிழிசை விளக்கம்!
Reviewed by மறத்தமிழன்
on
March 02, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.