Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 5, 2017

மத்திய இணை அமைச்சராகிறார் இல. கணேசன்?


மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யான பாஜக மூத்த தலைவர் இல. கணேசனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான இல. கணேசனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக பாஜகவின் மூத்த தலைவரான இல. கணேசனுக்கு நீண்டகாலமாக பதவிகள் எதுவும் தரப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலே இல. கணேசன் மத்திய அமைச்சராகிறார் என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக இல. கணேசன் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இல. கணேசன், மத்திய அமைச்சரவையில் இணைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது இல. கணேசனுக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். தமிழக எம்.பி. பொன். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே மத்திய இணை அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.