Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

பணத்திற்காக நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன் - டெல்லியில் அதிர்ச்சி


பணத்திற்கு ஆசைப்பட்டு தனது மனைவியை 4 வருடமாக, மனவியை தனது நண்பர்களுக்கு விருந்தாக்கி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். 
கிழக்கு டெல்லியில் உள்ள நியூ அசோக் நகரில் வசித்து வரும் 35 வயது பெண்ணிற்கு, அவரின் கணவரின் நண்பர்கள் கடந்த 4 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவர, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பெண் கூறியது போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணத்திற்காக ஆசைப்பட்டு தன்னுடைய கணவனே, அவர்கள் நண்பர்களை அழைத்து வந்து, தன்னை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வருவதாகவும், இதுபற்றி வெளியே கூறினால் தனது நான்கு வயது மகனை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்தர். மேலும்,   கடந்த 4 வருடங்களாக இந்த கொடூரத்தை தான் அனுபவித்து வருவதாக கண்ணீர் மல்க கூறினார்.

இதையடுத்து, அப்பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.