.பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதாக கூறி திருமண விழாவிற்காக சென்ற மணமகனை, திருமண மண்டபம் அருகே நிறுத்தி தாக்கியுள்ளார் அவரது முதல் மனைவி
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, 18 வயதான பெண்ணுக்கும், மணமகனுக்கு திருமணம் நடைப்பெற இருந்தது. ஆனால் திருமணத்திற்காக மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் திருமண மண்டபத்திற்கு அருகே வந்ததும், அங்கு வந்த ஒரு 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மணமகனை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொண்டு 13 வயதில் மகன் இருக்கும் போது, இரண்டாவது திருமணமா செய்கிறாய்? என வாதாடியதோடு, தாக்கவும் செய்தார்.
என்னை திருமணம் செய்து முறையாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்ய நினைத்தால் இது தான் கதி என தாக்கினார்
இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது ஏற்கனவே நான் அந்த பெண்ணை விவாகரத்து செய்து கிட்டத்தட்ட 7ஆண்டுகளாக தனியாக தான் வசித்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார் அந்த மணமகன்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.