Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 26, 2017

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் மீது கற்கள்,பாட்டில்களை வீசி தாக்குதல்


கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது 15க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் காயமடைந்த மீனவர்கள் இரவோடு இரவாக அச்சத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

சமீபத்தில் ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படை நடுக்கடலில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த பிறகு, மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.