March 8, 2017
மீனவர் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்... தொடரும் போராட்டம்!
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், தமிழக எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தச் சம்பவத்தில், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 22 வயது மீனவர் பிரிட்ஜோ உயிரிழந்தார். மேலும், சில மீனவர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து, பிரிட்ஜோ உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும், தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
'மீனவர் உயிரிழப்புக்குக் காரணமான இலங்கைக் கடற்படையினரைக் கைதுசெய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரை வெளியேற்ற வேண்டும்.
மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து உறுதி தர வேண்டும்.' இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் தரப்பு கூறியுள்ளது.
மேலும், இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை மீனவர் பிரிட்ஜோ உடலை வாங்க மாட்டோம் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
மீனவர் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்... தொடரும் போராட்டம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 08, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.