மைசூரு ஹெப்பால் அருகே உள்ள லட்சுமிகாந்தா நகரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. பிரபல மாடல் அழகியான இவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் தினமும் ஏதாவது போதை பொருளை உட்கொண்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இதனை கண்டித்த தாத்தா, பாட்டி ஆகிய இருவரும் அறிவுரை கூறி வந்தனர்.
இந்த நிலையில் வழக்கம் போல பிரியதர்ஷினி நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வந்தார். இதனை கண்டித்த தாத்தா, பாட்டி ஆகிய இருவரும் புத்திமதி கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரியதர்ஷினி தாத்தா, பாட்டி ஆகிய இருவரையும் வீட்டுக்குள் வைத்து வெளியில் பூட்டினார். பின்னர் வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார். வீட்டுக்குள் தீ பரவியதால் பிரியதர்ஷினியின் தாத்தா, பாட்டி உதவி கேட்டு கூச்சல் போட்டனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்த ஹெப்பால் போலீசார் தப்பி ஓடிய மாடல் அழகியை தேடி வருகின்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.