Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

உச்சக்கட்ட போராட்டம்! காவல்துறை கெடுபிடி! பரபரப்பான சூழலில் நெடுவாசல்!


கடந்த 15 நாட்களாக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்ட குழுவினர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழக விவசாயிகளை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் கூறியிருக்கிறார்.

மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கண்டிப்பாக அனுமதி அளிக்க மாட்டோம் என்றும் முதல்வர் உறுதி அளித்திருக்கிறார். ஆனால் நெடுவாசல் போராட்ட களத்தில் உள்ளவர்களோ வாய்மொழி உத்தரவு தேவையில்லை, ஜல்லிக்கட்டு அனுமதி போன்று நிரந்தர உறுதி வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நெடுவாசலை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் ஏர் கலப்பை, பயிர், போன்றவற்றை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறை அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நெடுவாசலுக்கு செல்லும் சாலைகளில் 8 சுங்கச் சாவடிகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 33 இடங்களில் பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைது நடவடிக்கைக்கு ஆயத்தமான பணிகள் இவை என்றும் தகவல்கள் கூறுகின்றன. முதல்வர் சந்திப்புக்குப் பிறகு போராட்டக் களம் பரபரப்பான சூழ்நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.