Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

சசிக்கு கமிஷன் தரமுடியாமல் எம்எல்ஏக்கள் ஓடுவார்கள்! நத்தம் விசுவதான் அதிரடி!


அதிமுக இரண்டாக உள்ளது. அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் சசி அணியாகவும்,

அதிமுக தொண்டா்கள் மிக பெரிய பொறுப்புகளில் இல்லாதவா்கள், முன்னாள் நிர்வாகிகள் பன்னீர் செல்வம் அணியாகவும் உள்ளனா்.

நேற்று திண்டுக்கல்லில் பன்னீர்செல்வம் அணியை சோ்ந்த நத்தம் விசுவநாதன் தலைமையைில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட நத்தம் விசுவநாதன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவா் பேசியதாவது,

எம்எல்ஏக்கள் ஆட்டு மந்தைகள் போல் அடைத்து வைக்கப்பட்டு, அவா்களிடம் 3 கோடி பணம், 3 கிலோ தங்கம் ஆசைக்காட்டி விலை பேசி விட்டார்கள்.

விலைப்போன எம்எல்ஏக்கள் வாக்களித்த மக்களிடம் பதில் கூறியே ஆகவேண்டும். சசி கும்பலுக்கு கப்பம் கட்டமுடியாமல், கமிஷன் தரமுடியாமல் அனைத்து எம்எல்ஏக்களும் விரைவில் ஒபிஎஸ் பக்கம் வருவார்கள்.

எம்ஜிஆா் உருவாக்கிய அதிமுக என்கிற பூ மாலைக்கு, ஜெயலலிதா அழகு சோ்த்தார். அந்த பூ மாலை சசியிடம் சிக்கி சின்னாபின்னமாகிறது.

சசிகலாவை ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேற்றிய பின்பு, எங்களிடம் சசி என்வீட்டு வேலையாள்தான். ஆட்சிக்கு, கட்சிக்கு ஒபிஎஸ்தான் என்று அப்போதே ஜெயலலிதா கூறினார்.

மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாராவது சந்தித்தால் அவா் உண்மையை சொல்லிவிடுவார் என்று பயந்துதான் சசிகலா யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது 3 விதமான சுவீட் கொடுத்து பேசினார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

அவர் அரசியல் காமெடி நடிகராக வளம் வருகிறார், தோ்தலில் நின்றால் ஒரு கவுன்சிலராகக் கூட வெற்றி பெறமுடியாது இவ்வாறு அதிரடியாக நத்தம் விசுவநாதன் பேசினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.