March 13, 2017
அடப் பக்கிகளா.. 'பர்ஸ்ட் நைட்டு'க்குமாய்யா இன்விடேன் அடிப்பீங்க!!!
கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சீமந்தம் என இன்விடேசன் அடித்த காலம் போய் இப்போது முதலிரவுக்கும் இன்விடேசன் அடித்துள்ளனர். இதுதான் இப்போது வைரலாகி வருகிறது.
திருமண முகூர்த்தத்திற்கு அழைப்பிதழ் அடித்து அதை ஊரெல்லாம் கொடுத்து அழைப்பார்கள். நம்ம ஆட்களும் பட்டு பளபளக்க போய் திருமணத்தில் பங்கேற்று விட்டு மணக்க மணக்க சாப்பிட்டு விட்டு வருவார்கள்.
இதோ புதுமை செய்கிறேன் என்று சாந்தி முகூர்த்தத்திற்கும் அழைப்பிதழ் அடித்து அதை சமூகவலைத்தளங்களில் உலாவ விட்டுள்ளார்கள். 'கட்டில் விளையாட்டு விழா' அழைப்பிதழாம்.
நல்லா வைக்கிறாங்கய்யா பேரு.
உள்ள என்ன இருக்கும்னு படிச்சு பார்த்தால் மங்களகரமாக ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஸ்ரீகாமதேவன் துணை,மன்மதன், ரதி துணையோடு இந்த அழைப்பிதழை அடித்துள்ளனர்.
கட்டில் காளை மணிக்கும், தலையணை தந்திரி சந்தியாவிற்கும் பள்ளியறை பயணம் துவங்க உள்ளதால் சுற்றமும் நட்பும் கூடி கும்மியடிக்க அழைக்கிறோம் என்று அழைத்துள்ளனர்.
இதற்கு அழைப்பு விடுத்துள்ளது கௌரவ தேன் நிலவு சங்கமாம். இதுக்கெல்லாமா கூட இன்விடேசன் அடிப்பாங்க. விட்டா வீடியோ கூட எடுப்பாங்க போலயே!
இந்த விழாவிற்கு போனா என்ன மொய் எழுதுவது?
அடப் பக்கிகளா.. 'பர்ஸ்ட் நைட்டு'க்குமாய்யா இன்விடேன் அடிப்பீங்க!!!
Reviewed by மறத்தமிழன்
on
March 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.