Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 5, 2017

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு!? பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நெடுவாசல் போராட்டம் எதிரொலியா?


தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.78 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.1.76 காசு விலை உயர்த்தப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் வாட் வரி 24 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்ந்திருப்பதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதை உற்று கவனித்தால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவது தெளிவாகும். அதில், வாட் வரி உயர்வை மட்டும்  ஒரு காரணம் என்பதை காட்டி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது வாட் வரி மட்டுமே காரணமாக புலப்படவில்லை என்பது சராசரி மனிதனே சந்தேகிக்கும் செயலாக அமைந்துள்ளது.
மேலும் தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் எதிரொலியாகத் தான் இந்த பெட்ரோல் விலை உயர்வோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
நேற்று மத்திய அமைச்சர், போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தோல்வியில் முடிந்தது.
மறுநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதோ என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்சம் தோன்றியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.