Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 5, 2017

அமெரிக்காவில் இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது-சுஷ்மா சுவராஜ்


அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சி அமைந்த பின்னர் வெளிநாட்டவர்கள் மீதான இனபாகுபாடு அதிகரித்து வருகிறது. டொனால்டு டிரம்ப் அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை கொண்டு உள்ளது. இதற்கிடையே இப்போது அங்கு இந்தியர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய என்ஜினீயர் சீனிவாஸ், கன்சாஸ் மாகாணத்தில் கடந்த 22-ந் தேதி மது விடுதி ஒன்றில் வைத்து, கடற்படை வீரர் ஆதம் புரிண்டனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்கு முன் இந்திய வர்த்தகர் ஹர்னிஷ் பட்டேல் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்திய வர்த்தகர் ஹர்னிஷ் பட்டேல் படுகொலை செய்யப்பட்டது அமெரிக்க வாழ் இந்திய மக்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வாஷிங்டன்னின் கெனட் சிட்டியில் 39 வயது சீக்கியர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பதாவது:

இது போன்ற சம்பவங்கள் மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது.  தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் தாக்குதலுக்கு ஆளான தீப் ராய்யின் தந்தை சர்தார் ஹர்பல் சிங்கிடம் தொடர்பு கொண்டு பேசினேன். மகன் அபாய கட்டத்த்தை தாண்டி விட்டதாக தற்போது உடல் நலம் தேறிவருவதக அவர் கூறியுள்ளார். அவருக்கு ஆறுதல் கூறியுள்ளேன்.  இந்திய வர்த்தகர் ஹர்னிஷ் பட்டேல் குடுபத்தாருக்கு கனத்த இதயத்துடன் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.