Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 26, 2017

பா.ஜ.க.வின் கனவு பனால்..! ரஜினிகாந்த் கேம் அம்பேல்..!


பாரதிய ஜனதா கட்சியின் பார்வையெல்லாம் தற்போது தமிழகத்தின் மீது பதிந்துள்ளது.

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தோ்தலில் அசத்தலான வெற்றியை அடைந்து மிகவும் சந்தோசத்தில் உள்ளது.

தேசிய தலைவா் அமித்ஷாவின் திட்டங்கள் அனைத்தும் பலித்து வருகிறது. அவரின் திட்ட படிதான் தமிழகத்தில் அதிமுக என்கிற கட்சி காணாமல் போகும் நிலைக்கு வந்துள்ளது.

இதே நிலை நீடித்தால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். அப்போது மிக தெளிவாக தமிழகத்தில் கால் ஊன்ற பா.ஜ.க திட்டம் வகுத்துள்ளது.

வருகிற டிசம்பா் மாதம் இமாசலப்பிரதேசம், குஜராத் ஆகிய சட்டமன்றங்களுக்கு தோ்தல் வருகிறது. அதனுடன் தமிழகத்திலும் சட்டமன்ற தோ்தலை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் அதற்கு கட்சிக்குள் ரஜினிகாந்தை கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறது.

இடைத் தோ்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்திருந்தாலும், பொது தோ்தலுக்குள் ரஜினியை கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

தமிழர்களுக்கு இனி நல்லது நடக்க வேண்டும் என்றால் அது ரஜினிகாந்த் மற்றும் பாரதிய ஜனதா கட்சியால் மட்டும்தான் முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்துக் கொள்ள சில முயற்சிகளை செய்துள்ளது.

 அதாவது லைகா நிறுவனம் ஈழத்தில் தமிழர்களுக்காக கட்டிய வீடுகளை தமிழா்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியை ரஜினிகாந்தை வைத்து நடத்துவது. அதன் மூலம் உலக தமிழா்களிடம் நல்லபெயர் எடுப்பது என்று திட்டம் தீட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

அது பிள்ளையார் பிடிக்க போய், குரங்காக மாறிய கதையாகிவிட்டது. ரஜினி இலங்கைக்கு செல்கிறேன் என்று ஒற்றை வார்த்தைகூற அது தமிழா்கள் மத்தியில் எதிர்ப்பை உண்டாக்கியது.

ரஜினியும், தற்போது இலங்கை பயணத்தை ரத்து செய்துவிட்டார். இது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் அடிப்படை பிரச்சனையாக உள்ள காவிரி பிரச்சனை, மீத்தேன் பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சனை, விவசாயிகள் கடன் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து பா.ஜ.க. தமிழா்களைக் காப்பாற்றி, தமிழகத்தின் மீது அக்கரை உள்ள ஒரே கட்சி பா.ஜ.கதான் என்று பெயா் எடுக்க ரகசியம் திட்டம் தீட்டி வருகிறது.

அதில் நடிகா் ரஜினியையும் இணைத்துக் கொண்டு டிசம்பரில் சட்டமன்ற தோ்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

ஊரு இரண்டு பட்டால் அது கூத்தாடிக்கு கொண்டாட்டமோ இல்லையோ, அதிமுக இரண்டு பட்டதால் பா.ஜ.கவுக்கு கொண்டாட்டம்தான் என்ன கொடுமை சார் இது.
 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.