March 6, 2017
தொடரும் போராட்டம்: நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை
நெடுவாசலில் நடைபெறும் போராட்டம் இன்று 19வது நாளை எட்டியுள்ளது. நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்த வருவார்கள் என மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்களின் கோரிக்கை. இதை வலியுறுத்தி நெடுவாசலில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் இன்று 19வது நாளை எட்டியுள்ளது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எதிலும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியிலேயே முடிந்தது. நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வளக்காடு கிராமத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து 6 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளனர். வளக்காடு மக்களிடம் ஆலோசித்த பிறகு தான், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளார். அதுவரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடரும் போராட்டம்: நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை
Reviewed by மறத்தமிழன்
on
March 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.