Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 14, 2017

இன்று தெரிந்து விடும்..!! சசி பார்ட்டியை ஆதாரமே இல்லாமல் ஆக்கப் போகும், ஓ.பி.எஸ்ஸின் அவதாரம்..!!


அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் கமிஷனிடம் அளித்த புகாருக்கு சசிகலா பதில் அனுப்பினார்.
அந்த பதிலுக்கு பன்னீர்செல்வம் அணியினர் இன்று(மார்ச், 14) விளக்கம் அளிக்க உள்ளனர்.
தேர்தல் ஆணையம் சார்பில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. சசிகலா சார்பில், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன், பதில் அனுப்பினார்.
இதையடுத்து, 70 பக்கங்கள் கொண்ட விளக்கத்தை, தேர்தல் கமிஷனுக்கு, சசிகலா அனுப்பினார். அதை பெற்ற தேர்தல் கமிஷன், புகார்தாரர் என்ற அடிப்படையில் அதன் நகலை பன்னீர் அணியினருக்கு அனுப்பியுள்ளது.
அதன் மீதான விளக்கத்தை, 14ம் தேதிக்குள் தரும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பன்னீர் அணியினர் பதில் தயார் செய்துள்ளனர். சசிகலா அளித்த பதிலில்,  2011ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை, பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா 2012ல் ரத்து செய்து விட்டார்.
எனவே, அடிப்படை உறுப்பினராகி, ஐந்து ஆண்டு நிறைவு பெறவில்லை என்ற வாதம் தவறானது என, குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கு பன்னீர் தரப்பினர், மறுப்பு தெரிவித்துள்ளனர். கட்சியில் இருந்து ஒருவர் நீக்கப்பட்டு, மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டால் சேர்ந்த தேதியில் இருந்து தான் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என, மறுப்பு விளக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
அதற்கான ஆதாரங்களையும் இணைக்க, முடிவு செய்துள்ளனர். இந்த விளக்க மனுவை, இன்று தேர்தல் கமிஷனிடம் அளிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.