Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 7, 2017

“மக்களால் மனதளவில் பாதிக்கப்பட்டேன்”- நெல்லையில் குமுறிய கருணாஸ்..!!


“
குடிகாரன் பேச்சு விடிஞ்ச உடனே போச்சு” என்பதை போல அரசியல்வாதிகளின் பேச்சு இருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது என் பதவியே போனாலும் மக்கள் பக்கம் இருப்பேன் என்று கூறிய கருணாஸ், தற்போது அப்படியே உல்டாவாக பேசி வருகிறார்.
திருநெல்வேலியை சேர்ந்த அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் சேதுராமபாண்டியனின் இரண்டாம் ஆண்டு நினைவு விழா நேற்று நெல்லையில் அவரது வீட்டில் நடந்தது.
நிகழ்ச்சியில் அவரது பேரன் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.,பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
அவர் பேசுகையில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.ஆனால் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
எனவே மக்களின் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என தெரிவிக்கிறேன்.
நான் சட்டமன்ற உறுப்பினராகும் வகையில்சீட் வழங்கி வாய்ப்பளித்தவர் ஜெயலலிதாதான். அதற்கு உதவியாக இருந்தவர் சசிகலா.
எனவே இருவருக்கும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். எனவேதான் நான் சசிகலாவை ஆதரித்தேன்.
ஆனால் என்னை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தார்கள். அத்தகைய விமர்சனங்களால் நான் மனதளவில் மிகுந்த பாதிப்படைந்தேன்.
இருப்பினும் என்னை தேர்வு செய்த மக்களுக்கும் என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.