Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 18, 2017

கருணாஸ் எம்.எல்.ஏ. பதவிக்கு ஆப்பு ? ஓட்டுக்கு தலைமை கொடுத்த பல லட்சங்கள் ஆட்டையை போட்டது அம்பலம்


கருணாஸ்க்கு மேலும் சிக்கல் வருகிறது.  அவர் மீடியாக்களுக்கு அளித்த பேட்டியே காரணம்..!
கருணாஸ்  காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்  என்பதும் ஆத்திரத்தில் வார்த்தைகளை   கொட்டினார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்நிலையில் தனது திருவாடனை தொகுதி மக்களை கருணாஸ்திருவாடனை தொகுதிக்கு சென்ற கருணாஸ் தனது ஆதரவாளர்களுடன் திருவாடனைக்கு சென்றார்.
அங்குள்ள பஸ் நிலையம் பகுதிக்கு கருணாஸ் சென்றபோது அங்கு திரண்டிருந்த மக்கள் திடீரென கருணாஸ்க்கு கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள்.
இதனால் அங்கு பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. செருப்புக்களை ,கற்களை வீசி விரட்டி அடித்தார்கள். மிகவும் நொந்து போன நிலையில் சென்னை வந்து வீட்டிற்குள் முடங்கினார்.
கருணாஸ் மீடியாக்களில்,  “இரண்டு லட்சம் வாக்காளர்கள் இருக்கும்  எனது தொகுதியில் வெறும் எழுபதாயிரம் பேர்தான் எனக்கு ஓட்டளித்தார்கள்.
எனவே வாக்களிக்காதவர்கள் என்னைப் பற்றி பேச தகுதி இல்லை என்று கூறினார். நான் சமூகம்  சார்ந்தவன் தான். என் சமூகத்தால் தான் ஜெ.,எனக்கு வாய்ப்பு கொடுத்தார் என்றும் கூறிவிட, கொதித்து விட்டார்கள் தொகுதி மக்கள்.
தொகுதிவாசியான அமலநாதன் என்பவர் கடுமையாக கருணாஸ்க்கு எச்சரிக்கை விடுத்தார். நீங்கள் ஜெயித்தது பணம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கித்தான்.செல்வாக்கால் ஜெயிக்கவில்லை..!
அதிலும் தலைமை ஒரு ஓட்டுக்கு ஐநூறு என்று கூறி உங்களிடம் மொத்த பணத்தையும் கொடுத்தது. ஆனால் நீங்கள் முன்னூறு, இருநூறு, நூற்றி ஐம்பது என்று ஐஸ் கட்டி கரைவது போல குறைத்துக் கொண்டே வந்தீர்கள்.
அத்தனைக்கும் என்னிடம் ஆதராரம் உள்ளது. எனவே உங்கள் மீது வழக்கு தொடுக்கப் போகிறேன்.. !
உங்கள் பதவியே செல்லாது என்று நிருபிப்பேன் என்று வீடியோ வடிவில் தனது ஆத்திரத்தைக் கொட்டியுள்ளார்.
பரிதாபம் தான் ..கூடா நட்பு கேடாய் முடிந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.