நகைக் கடன் அளிக்கும் வங்கிகள் அல்லாது நிதி நிறுவனங்களுக்கு 20,000 ரூபாய்க்கும் அதிகமான தொகையை ரொக்கப்பணமாக அளிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை ஆர்பிஐ வங்கி வியாழக்கிழமை வெளியிட்டது.
முன்பு எல்லாம் தங்க நகைக்கடன் வாங்குபவர்கள் 1 லட்சம் ரூபாய் வரை பணமாக பெறலாம் என்றும் அதனை மீறும் போது காசோலையாகப் பெறலாம் என்று விதி இருந்தது. மேலும் இந்த புதிய விதி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
வணிகம் பாதிப்பு
வங்கிகள் அல்லாது நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடன் போன்ற சில திட்டங்களில் தான் அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற்று வந்தன. ஆர்பிஐ வங்கியின் இந்த புதிய விதிகளால் இந்த நிறுவனங்கள் பெறும் அளவில் பாதிக்கும்.
சட்டம்
வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ் வங்கிகள் அல்லாது நிதி நிறுவனங்கள் மீது இந்த புதிய திருத்தம் உடனடியாக அமலுக்கு வருகின்றது. இப்போது இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து 20,000 வரை மட்டுமே பணமாக கடன் அளிக்க முடியும் என்றும் இது உடனே அமலுக்கு வருகின்றது என்றும் மத்திய வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வங்கிகள் அல்லாது நிதி நிறுவனங்கள் பங்குகள் விலை சரிவு
இதனால் நகை அட்டமானக் கடனை அதிகளவில் அளித்து வரும் முத்தூட் ஃபினான்ஸ் மற்றும் மணப்புறம் ஃபினான்ஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
பங்குகளின் விலை
மணப்புறம் ஃபினான்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை சுமார் 4.54 சதவீதம் சரிந்து 90.50 ரூபாயாகக் குறைந்தது. முத்தூட் ஃபினான்ஸின் பங்குகள் 3.85 சதவீதம் அதாவது 13.55 புள்ளிகள் குறைந்து 337.95 ரூபாய் வர்த்தகம் ஆனது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.