Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 23, 2017

ஜெ. சமாதிக்கு போனால் நாசாமாய் போயிடுவிங்க! வேட்பாளர் அதிர்ச்சி தகவல்!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகே புதைக்கப்பட்டது.

ஜெ.வின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சமாதி எழுப்பப்பட்டது. தற்போது தமிழகத்தில் ஜெ. சமாதி முக்கியமாக கருதப்படுகிறது. அதிமுகவினர் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஜெ. சமாதியில் ஆசி பெற்ற பிறகே துவங்குகிறார்கள்.

இந்நிலையில் என் சமாதிக்கு யார் வந்தாலும் நாசமாத்தான் போவார்கள் என்று ஜெயலலிதா கனவில் வந்து கூறியதாக ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஜி.ஆர். நம்பி என்பவர் கூறி வருகிறார்.

இவர் தற்போது அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி ஆர்.கே.நகரில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே எம்.ஜி.ஆர் என்னை படிக்க வைத்தார். ஜெயலலிதா என்னை எங்கு பார்த்தாலும் பேசுவார் என்று பில்டப் கொடுத்தவர்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். நம்பி கூறுகையில், நான் எம்.ஜி.ஆர். சமாதியில் மட்டுமே ஆசி பெற்றேன். ஜெ. சமாதிக்கு செல்லவில்லை. ஏன் தெரியுமா? அங்கு சென்றால் நாசமாகி விடுவாய் என்று ஜெயலலிதா என் கனவில் தோன்றி சொன்னார் என்று கூறியுள்ளார்.

மேலும், என் சமாதிக்கு பன்னீர் வந்தார் பதவி பறிபோனது, சசிகலா வந்தார் ஜெயிலுக்கு சென்றார், தீபா வந்தார் கணவரை பிரிந்தார், தினகரன் வந்தார் சின்னம் பறிபோனது என ஜெ. கூறியதாக எம்.ஜி.ஆர். நம்பி தெரிவித்து வருகிறார்.

மேலும், எம்.ஜி.ஆரிடம் ஒரு குடும்பத்தின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கூறினேன். அவரும் என் ஆவியை அழைத்து கொண்டார். நான் இப்போது என் சமாதியில் இல்லை எம்.ஜி.ஆர் சமாதியில் தான் இருக்கிறேன் ஜெ. கனவில் கூறியதாக எம்.ஜி.ஆர். நம்பி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.