March 26, 2017
அமெரிக்காவில் மீண்டும் இனவெறி! மிரட்டப்பட்ட சீக்கிய பெண்!
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் இனவெறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஓடும் ரயிலில் சீக்கிய பெண் ஒருவர் மிரட்டப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராஜ் பிரீத் ஹெயர் என்ற சீக்கிய பெண் தன் நண்பரின் பிறந்த நாள் விழாவிற்காக நியூயார்க் சுரங்கப்பாதை ரயிலில் சென்றுள்ளார். அப்போது அந்த ரயிலில் அமெரிக்கர் ஒருவர் மிரட்டியுள்ளார்.
மேலும் அந்த பெண்ணிடம், அமெரிக்க ராணுவ வீரர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா உனக்கு? இந்த நாட்டுக்கு அவர்கள் செய்த அர்ப்பணிப்புகள் தெரியுமா உனக்கு? எல்லாம் உன்னை போன்ற ஆட்களால் தான் என்று கூறியுள்ளார்.
லெபனானுக்கு திரும்பிப் போ. எந்த வகையிலும் இந்த நாட்டை சேர்ந்தவராக நீ ஆகி விட முடியாது என்று கூறியிருக்கிறார் அந்த அமெரிக்கர்.
இந்த சம்பவம் அந்நாட்டின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் இந்த வார இனவெறி என்ற தலைப்பில், இனவெறி சம்பவங்களை வெளியிட்டு வருகிறது.
வெளிநாட்டினர் மீதான அமெரிக்கர்களின் இனவெறித் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவில் வாழும் வெளி நாட்டினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் இனவெறி! மிரட்டப்பட்ட சீக்கிய பெண்!
Reviewed by மறத்தமிழன்
on
March 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.