Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

மன வளர்ச்சி குன்றிய குழந்தை தான் பிறக்கப் போகிறது என்று முன்னரே தெரிந்தாலும், கருவை கலைக்கக் கூடாது!


கரு உருவான 20 வாரத்திற்குள் அந்த கருவை கலைத்துக் கொள்ளலாம். 20 வாரங்களுக்கு மேல் ஆனால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலும், அல்லது உடல்ரீதியாக, மனரீதியாக கடும் பாதிப்புகள் ஏற்படும் என்றால் மட்டும் கருவை கலைக்கலாம்.

இந்நிலையில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கருவில் உள்ள தங்களது 26 வார குழந்தைக்கு டவுன் சின்ரம் பாதிப்பு இருப்பதாகவும் இதனால் அதனை கலைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தை பிறந்தால் குறைபாடுகளுடன் பிறக்கும் என்றும் அதே நேரம் தாயின் உயிருக்கு இதனால் ஆபத்து வராது என்றும் கூறி இருந்தனர்.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ” இந்த வழக்கு மிகவும் சோகமான ஒன்று. பிறக்கும் குழந்தை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குறைபாடு உள்ளதாக பிறக்கலாம். இது அந்த குழந்தையின் தாய்க்கு துரதிஷ்டமான ஒன்று. ஆனால் கருவை கலைக்க கூடாது.

நம் வாழ்க்கை நம் கையிலேயே உள்ளது. இது போன்ற சூழல்களில் கருவில் உள்ள குழந்தையை கொல்ல அனுமதி வழங்குவதற்கு சாத்தியங்கள் இல்லை.” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியதால் 24 வார கருவை கலைத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மும்பைச் சேர்ந்த ஒரு பெண் கருத்தறித்து    24 வாரங்கள் ஆன நிலையில் அந்த குழந்தை இறந்து பிறக்கும் என சான்றளிக்கப்பட்டதால்  அந்த கருவை கலைக்க அனுமதி அளித்தனர்.

எனினும் இந்த வரம்பை 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக அதிகரிக்கும் மசோதா 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில், இன்னும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.