March 5, 2017
அறிவித்த பரிசுத் தொகையை வழங்காத ஹரியானா அரசு- சாக்ஷி மாலிக் சீற்றம்
ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு, ஹரியாணா அரசு அறிவித்த ரூ.3.5 கோடி பரிசுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் வெண்கலம் வென்ற சாதனை மங்கை சாக்ஷி மாலிக்கிற்கு ஹரியாணா அரசு அறிவித்த பரிசுத் தொகை ரூ.3.5 கோடி இதுவரை வழங்காதது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் போட்டிய நடைபெற்றது. அதில் சீனா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளே பதக்கங்களை வென்று குவித்து வந்தனர். இதனால் இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்காது என்றே இந்தியர்கள் விரக்தி அடைந்தனர்.
அப்போது மல்யுத்தப் போட்டியில் பெண்கள் பிரிவில் சாக்ஷி மாலிக் என்ற 24 வயது பெண் முதல் முறையாக இந்தியாவுக்காக வெண்கலத்தை பெற்று தந்தார். முதல் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த அவருக்கு சொந்த மாநிலமான ஹரியாணா அரசு ரூ.3.5. கோடி பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்தது.
ஆனால் அந்தத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ட்விட்டரில் சாக்ஷி மாலிக் தெரிவிக்கையில் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்த ஹரியாணா மாநில அரசுக்கு என்னென்றும் கடமைப்பட்டுள்ளேன். ஆனால் அத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமா?
இத்தனை நாள்கள் ஆகியும் இதுவரை பரிசுத் தொகை வழங்காததால் அந்த அறிவிப்புகள் அனைத்தும் ஊடகங்கள் முன்பு பெருமை பெறுவதற்காகத்தானா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் விளையாடி இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த ஒரு வீராங்கனைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது அனைவரையும் வருத்தமடைய செய்கிறது.
அறிவித்த பரிசுத் தொகையை வழங்காத ஹரியானா அரசு- சாக்ஷி மாலிக் சீற்றம்
Reviewed by மறத்தமிழன்
on
March 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.