March 2, 2017
அதிமுகவில் காட்சிகள் மாறுதா..? அதிர்ச்சி தகவல், அம்மாடியோவ்..!
அதிமுகவில் தினமும் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அது அனைத்தும் திடுக் தகவலாகவும், அதிர்ச்சி தரும் தகவலாகவும் உள்ளது.
அதிமுகவில் தற்போது பரபரப்பாக பேசிவரும் சங்கதி என்னவென்றால், சசிகலாவிடம் இருந்து கட்சியை கைப்பற்ற வேண்டும்.
அதற்கு, எடப்பாடியையும், பன்னீர் செல்வத்தையும் இணைக்க வேண்டும். இந்த வேலையில் கே.பி முனுசாமி இறங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுகவில் சசிக்கு எதிராக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசியபோதே 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் வந்திருக்கவேண்டும்,
ஆனால் 12 எம்எல்ஏக்கள் மட்டுமே அவருடன் வந்தனா். மற்றவா்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனா். சசிகலாவை அவா்கள் விரும்பாவிட்டாலும். ஏற்க வேண்டிய நிர்பந்தம் அவா்களிடத்தில் இருந்தது.
இந்த நிலையில் முதன் முதல் ஆளாக சசிகலா புஷ்பா எம்பி, தோ்தல் ஆணையத்திடம் சசிகலாவுக்கு அடிப்படை உறுப்பினா் அட்டைக்கூட அவரிடத்தில் கிடையாது.
அப்படி அவா் வைத்திருந்தால் அது போலியானது சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னா் சசிகலாவை, செங்கோட்டையன், செல்லூர்ராஜு, காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்தனா்.
அப்போது சில முடிவுகளை எடுக்க சொல்லி 4 பேரையும் அனுப்பியுள்ளார். தற்போது சசிகலா குடும்பத்தில் அதிகார சண்டை நடந்து வருது. அதில் திவாகரன் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார்.
சின்ன அத்தை, சின்ன அத்தை என்று கூறி வந்த தீபக் திடீரென எதிர்த்து இருப்பது சசிகலாவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
தீபா, பன்னீர், செல்வம், சசி என்று உடைந்து போய் உள்ள அதிமுவை இணைக்கும் திட்டத்தில் முனுசாமி இறங்கியுள்ளார்.
ஒரு வாரத்தில் தோ்தல் கமிஷனின் உத்தரவு வந்துவிடுமாம், அப்போது எடப்பாடியை முதல்வராகவும், பன்னீர் செல்வத்தை கட்சியின் பொதுச் செயலாளராகவும் கொண்டு வரவேண்டும் என்கிற திட்டம் உள்ளதாம். இதற்காக பன்னீர் செல்வம் அணி முயன்று வருவதாக கூறப்பட்டுகிறது.
இப்படி இணைந்தால்தான் சசிகலாவால் தொண்டர்கள் மத்தியில் பிளவுப்பட்டு நிற்கும் கட்சியை ஒன்றிணைக்க முடியும்.
கட்சி ஒன்றானால்தான் திமுகவை எதிர்க்க முடியும் என்று நம்புகின்றனா். சசிகலா சிறையில் இருந்தவாறே இவ்வாறு எல்லாம் நடந்துவிடக் கூடாது என்று பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். இவ்வாறு அதிமுகவில் உள்ள ஒரு முக்கியஸ்தா் தெரிவித்தார்.
அதிமுகவில் தொடா்ந்து பல திடுக் சம்பவங்கள் நடந்து வருகிறது. அது தொண்டா்களுக்கு மகிழ்ச்சியை தருமா என்பது காத்திருந்தால்தான் தெரியும்
அதிமுகவில் காட்சிகள் மாறுதா..? அதிர்ச்சி தகவல், அம்மாடியோவ்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 02, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.