விபத்தில் தனது பெற்றோர் இறந்ததையும் பொருட்படுத்தாமல் துக்கத்திற்கு இடையே பெற்றோரின் கனவை நிறைவேற்றும் வகையில், +2 மாணவி ஒருவர் தேர்வெழுதிய சம்பவம் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் முருகேசன். இவர் தனது மனைவி சுமதியுடன் நேற்று இருசக்கர வாகனத்தில் தமது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். மேச்சேரி அருகே வந்து வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி முருகேசனின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சுமதியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சுமதியும் உயிரிழந்தார். இந்நிலையில், அவர்களின் மூன்றாவது மகள் அமிர்தகௌரி மிகுந்த துக்கத்துக்கு இடையேயும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வை கண்ணீருடன் எழுதினார். பின்னர், அவருடைய சக மாணவிகள் கண்ணீர் மல்க அமிர்தகௌரிக்கு ஆறுதல் கூறினர்

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.