March 8, 2017
சமைச்சவன், சமையல்ல விஷம் கலந்துட்டா சாப்பிடுவீங்களா?' பொன்.ராதாகிருஷ்ணனைச் சாடும் டி.ராஜேந்தர்!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவிக்கும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ள நிலையில், 21-வது நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல், சினிமா பிரமுகர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள்.
என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்து, பேச்சுவார்த்தை நடத்திய போதும், திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு உறுதிபட அறிவித்தால் மட்டுமேபோராட்டத்தைத் திரும்பப்பெற முடியும் என போராட்டக்காரர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நெடுவாசல் மட்டுமல்லாமல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
நெடுவாசல் பெண்கள், தங்கள் வீடுகளில் அகல்விளக்குகளை ஏற்றியும், ஊர் மையமான மாரியம்மன் கோவில் திடலில் இருந்து, போராட்டம் நடக்கும் நாடியம்மன் கோவில் வரை பேரணியாக வந்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். திரைத்துறை பிரபலமான விஜய டி.ராஜேந்தர், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிறுவனரான தீபாவின் கணவர் மாதவன் உள்ளிட்டோர் நேரில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
அப்போது போராட்டக்காரர்களிடையே பேசிய தீபாவின் கணவர் மாதவன், "இவ்வளவு பசுமையான இடத்தை அழிக்க, இந்த அரசுக்கு எப்படி மனது வருகின்றது. மக்களை பாதிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தக்கூடாது. இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக எங்கள் இயக்கம், போராடும். அடுத்து சில தினங்களில் தமிழகம் முழுவதும் இந்த திட்டத்துக்கு எதிராக போராட உள்ளோம்" என்றார்.
திரைத்துறை நடிகரும், லட்சிய தி.மு.க தலைவருமான விஜய.டி.ராஜேந்தர், நல்லாண்டார்கொல்லை கிராமத்தில் ஒ.என்.ஜ.சி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் ஆழ்குழாய் கிணற்றை பார்வையிட்டவர், அங்கு இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டதுடன், நெடுவாசலில் நடந்து வரும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்தார்.
போராட்டக்களத்தில் பேசிய டி.ராஜேந்திரன்,"90 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி இவ்வளவு நாட்களாக போராடி வர்றாங்க. ஆனா அரசு இதை மவுனமாக வேடிக்கை பாக்குது. மீத்தேன் திட்டத்தை யார் கொண்டுவந்தால் என்ன, அதை செயல்படுத்தக்கூடாது. செயல்படுத்தினால், மண்ணுக்கு ஆபத்து எனச் சொன்னால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே. அதைவிட்டு பொன்.ராதாகிருஷ்ணன், 'இது இப்ப கொண்டுவந்த திட்டம் இல்லை, எங்களுக்கு முன்னால இருந்தவங்க. கொண்டு வந்த திட்டம்'னு சப்பைக்கட்டு கட்டுறாரு.
நேத்து சமைச்சவன், சாப்பாட்டுல விஷத்தை கலந்துட்டா, நீங்க அப்படியே சாப்பிடுவீங்களா?. பசுமை மிக்க நெடுவாசலை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சிப்பது சரியா. இந்த திட்டம் நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் திட்டம். இந்த திட்டம் தமிழகத்தில் எங்கேயும் செயல்படுத்தக் கூடாது. மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் நெடுவாசல் மக்களை அந்நிய சக்திகள் தூண்டிவிடுவதாக சொல்லி வருகிறார். அது தவறு. ஏன் என்றால் தங்கள் நிலத்தை காக்க அவர்களாகத்தான் போராடுகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது. இந்த திட்டம் தமிழகத்தில் இருந்து வெளியே போகும் வரை போராட வேண்டும். இந்தப் போராட்டம் நிச்சயம் வெல்லும். மத்திய அரசின் இந்தபோக்கு நீடிக்ககூடாது" என்றார்.
- சி.ய.ஆனந்தகுமார்
சமைச்சவன், சமையல்ல விஷம் கலந்துட்டா சாப்பிடுவீங்களா?' பொன்.ராதாகிருஷ்ணனைச் சாடும் டி.ராஜேந்தர்!
Reviewed by மறத்தமிழன்
on
March 08, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.