Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 6, 2017

அரண்மனை பந்தல், உணவு குவியல்..! மீண்டும் பல கோடிகளை கரியாக்கிய எம்எல்ஏ மகன் திருமணம்..!!


மஹாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜவுடன் சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இந்த வருடம் பருவ மழையின் ஏமாற்றத்தால் பல மாவட்டங்களில் வறட்சியால் சிக்கித் தவித்து வருகிறது.
இந்நிலையில், இம் மாநிலத்தின் பாஜ எம்எல்ஏவின் மகன் திருமணத்தை பல கோடிகளை குவித்து செலவிட்டு நடத்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநில பாஜக தலைவராக ராவ்சாகேப் தன்வே உள்ளார். இவர் தற்போது எம்எல்ஏவாகவும் இருந்து வருகிறார்.
ராவ்சாகேப் தன்வேவின் மகன் சந்தோஷ் தன்வேக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அதுவும் கடும் வறட்சி மாவட்டமான அவுரங்காபாத்தில், இவரது திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்தது. இந்த திருமணத்திற்காக அமைக்கப்பட்ட அரண்மனை போன்ற பந்தல் பல கோடிகளை தாண்டுமாம். திருமண விருந்தில், பலவிதமான உணவுகள் குவித்து பரிமாற்றப்பட்டன.
இத்திருமணத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், முன்னாள் முதல்வர் நாராயண் ரானே உட்ளிட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல கோடிகளை செலவழித்து நடந்த இந்த திருமண நிகழ்ச்சி வீடியோவை சந்தோஷ் தன்வே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் அவரின் பேஸ்புக் தளத்தில் கடும் கண்டனத்தை தெரித்துள்ளனர். மேலும், ‘திருமணத்துக்கு செலவிடுவதை தவிர்த்து சமூக பணிகளுக்கு செலவிடுங்கள்’ என அறிவித்தப்பட்டுள்ளது.
எம்எல்ஏ ஒருவரே பல கோடிகளை குவித்து செலவழித்து, ஆடம்பர திருமணம் செய்ததும், அதில், தலைவர்கள் பங்கேற்றதும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருமண செலவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து, திருமணம் செய்பவர்கள், அதில், 10 சதவீதத்தை ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தனிநபர் மசோதாவை, காங்கிரஸ் – எம்.பி., ரஞ்சித் ரஞ்சன், கடந்த மாதம் லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது பாராளுமன்ற அடுத்த கூட்டத்தொடரி, விவாதம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.