March 10, 2017
ஈஷா யோகா மையத்தில் மாணவன் உயிரிழப்பு; உடல் குளத்தில் மிதந்ததால் பரபரப்பு!!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வெள்ளயங்கிரியில் மிகப்பிரபலமான ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த யோகா மையத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாசிவராத்திரியில் 120 அடி சிவன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த பிரமாண்ட சிலையை காண நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், வேலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷ் என்பவர் இன்று காலை ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த குளத்தில் இறங்கி குளித்ததாகவும், திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த குளத்தில் குளிர்ந்த நீர் உள்ளதாகவும், அதனால் இதில் குளிக்க வேண்டாம் எனவும் தகவல் பலகை வைத்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் சற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்த கல்லூரி மாணவன் குளித்துள்ளார். அதனால்தான் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக ஈஷா யோகா மைய வட்டாரத்தில் கூறப்படுகிறது
ஈஷா யோகா மையத்தில் மாணவன் உயிரிழப்பு; உடல் குளத்தில் மிதந்ததால் பரபரப்பு!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 10, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.