Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 6, 2017

“பாத்திமா பாபு , லதா ஆகியோர் பத்தினி தெய்வங்கள்”- நாஞ்சில் சம்பத் வாயில சனி


பாத்திமாபு மற்றும் நடிகை லதா ஆகியோரை ‘பத்தினி தெய்வங்கள்’ என தனது முகநூல் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நாஞ்சில் சம்பத் அந்த பதிவில் கூறியுள்ளதாவது:
முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் திட்டம் கழக ஆட்சியை கவிழ்ப்பது அல்லது மு.க.ஸ்டாலின் முதல்வராக துணை நிற்பது அதுவும் முடியாவிட்டால் தேர்தலுக்கு வழிகாணுவது, இந்த சதி திட்டத்திற்கு சப்பைக்கட்டு கட்ட இன்றைக்கு தகிடுதத்தம் செய்கிறார் தப்பாட்டம் ஆடுகிறார் பாத்திமா பாபு , லதா போன்ற பத்தினி தெய்வங்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்து விட்டது. ஆனால் பார்த்த முகங்களையே திரும்ப திரும்ப பார்த்து அரசு வீட்டில் இருந்துகொண்டு அரசியலில் காணாமல் போன ஆட்களையும் காலாவதியான தலைவர்களையும் சில தேவையற்ற வீட்டை கூட்டி வைத்துக் கொண்டு கும்மாளம் போடுகிறார் ,பன்னீர் செல்வத்துக்கு மானமும் மரியாதையும் இருக்குமானால் அரசு வீட்டை காலி செய்து விட்டு அரசைப் பற்றி பேச வேண்டும் அரசு வீட்டில் இருந்துக் கொண்டே ஆபத்தான விளையாட்டை விளையாடுவது ஆரோக்கியமானது அல்ல.
என்று கூறியுள்ளார். பெண்களிடையே இத்தகைய பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.