Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 4, 2017

அதிமுக அழிக்கப்பட்டு விட்டது , திமுக அழிந்து கொண்டுள்ளது.. நீட் தேர்வு தமிழகத்திற்கு நல்லதே பொன்.ராதா பரபர பேட்டி


அதிமுக ஏற்கனவே அழிந்துவிட்டதாகவே கருதுகிறேன். திமுக அழிந்து கொண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதிமுக அழிந்துவிட்டதாகவும், திமுக அழிந்து கொண்டிருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு திறமையை வளர்த்துக்கொள்ள உதவும், தேசிய அளவிலான போட்டியை எதிர்கொள்ள நீட் தேர்வு உதவும். இதில் தமிழக அரசு வீணாக விளையாடிவிட வேண்டாம். தமிழக அரசு, மாணவர்களின் கல்வி திறமையை வளர்க்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தை கொண்டுவந்திருக்காவிட்டால், தமிழகத்திற்கு இப்போது மின்சாரமே கிடைத்திருக்காது.

அதிமுக ஏற்கனவே அழிந்துவிட்டதாகவே கருதுகிறேன். திமுக அழிந்து கொண்டுள்ளது. இப்போது மக்களிடம் ஒரு தேடுதல் உள்ளது. அந்த தேடுதலை நிறைவேற்றும் தகுதியுள்ள கட்சி பாஜகதான். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.