March 13, 2017
சுட்டு கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ சென்ற படகு யாருடையது? புது குழப்பத்தை கிளப்பும் - எச். ராஜா சர்மா
சுட்டு கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ சென்ற படகு யாருடையது? என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியில் கூறியுள்ளார்.
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
5 மாநில சட்டமன்ற தேர்தல் நடை பெற்று முடிந்துள்ள நிலையில் நாளைக்குள் 4 மாநில முதல்வர்கள் பதவியேற்பார்கள். ஆற்காடு நவாப் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துடன் சிறுபான்மையினரையும் அனுசரித்து செல்ல வேண்டும் எனவும் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் பா.ஜ.க தலைமை முடிவு செய்யும்
காவிரி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க வில்லை.
2014 -க்கு பிறகு தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பிரிட்ஜோ இறந்துள்ளார். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.
பாகிஸ்தான் வீரர்கள், உரி பகுதியில் இந்திய வீரர்கள் மீது தாக்கிய போது மத்திய அரசு எப்படி நடவடிக்கை எடுத்ததோ அது போன்ற நடவடிக்கையினை நிச்சயம் எடுக்கும்.
மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட இலங்கை அரசு காரணமாக இல்லாமல் கூட இருக்கலாம் . சீன ரோந்து படை கூட காரணமாக இருக்கலாம் .
மீனவர் பிரிட்ஜோ சென்ற படகு மத்திய அரசுக்கு எதிராக பணம் கொடுத்து மக்களை தூண்டும் கும்பலுடையதாகும். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுட்டு கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ சென்ற படகு யாருடையது? புது குழப்பத்தை கிளப்பும் - எச். ராஜா சர்மா
Reviewed by மறத்தமிழன்
on
March 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.