Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 3, 2017

உங்களோடு நான் இருக்கிறேன்! ‘‘கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் பேச்சு’’ நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு


கடந்த 15 நாட்களாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று நெடுவாசல் சென்று போராட்டக்குழுவினரை சந்தித்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையில் போராட்டக்குழுவினர் மத்தியில் ஸ்டாலின் பேசினார்.
அப்போது, குடியரசு தலைவரை சந்திப்பதற்காக நான் டெல்லி சென்றிருந்தேன். அப்போது இங்கே நடந்து கொண்டிருக்கும் போராட்டம் பற்றி குறிப்பிட்டேன்.
மேலும் தமிழக முதல்வர், பிரதமரை சந்திருக்கிறார். அப்போது தமிழத்தில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் மனுவாக கொடுத்திருக்கிறார். மொத்தம் 24 மனுக்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த 24 மனுக்களில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் பிரதமர் சந்தித்துவிட்டு வெளியே வந்து ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பேசியதாக பொய்யான தகவலை வெளியிடுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
நெடுவாசல் போராட்டக்குழுவினர் தமிழக முதல்வரை சந்தித்து இருக்கிறார்கள். அப்போது முதல்வர் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறியதாக வெளியான செய்தியை பார்த்தேன்.
ஆனால், இங்கே கூடியிருக்கும் நீங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிரந்தர தீர்வை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று போராட்டத்தை தொடர்வதாக அறிவித்திருக்கிறீர்கள்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான உங்கள் போராட்டம் இப்படியே தொடருமானால் உங்களுக்கு எப்போதுமே திமுக துணை நிற்கும் என்பதை இந்த இடத்தில் கூறி கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும், நெடுவாசல் போராட்டம் சம்பந்தமாக, மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.