Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 12, 2017

'பா.ஜ.க மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை...!'- திருநாவுக்கரசர் கருத்து


ஐந்து மாநிலங்களில நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, காங்கிரஸின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்தைக் கூறினார்.
அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், 'பா.ஜ.க கூட்டணி பஞ்சாபில் தோல்வியடைந்தது மக்கள் அக்கட்சி மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதைத்தான் உணர்த்துகிறது. இரண்டு மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றதையடுத்து, பா.ஜ.க.வுக்கு இந்திய அளவில் பெரும்பான்மை இருப்பதாக எண்ணக்கூடாது. நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மாநில பிரச்னைகளின் அடிப்படையில் மக்கள் ஓட்டுப் போட்டு இருக்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, சமாஜ்வாடி கட்சிக்கு எதிரான நிலைபாட்டை மக்கள் எடுத்துள்ளனர்.' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.