Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

ஸ்மார்ட் ஆகிய கருணாஸ்! தீபா பெயரைச் சொன்னவர், பன்னீர் பெயரைச்சொல்லவில்லை! அப்படிப்போடு...


தமிழக அரசியலில் அதிமுக சின்னத்தில் திருவாடனைத் தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றவா் புலிப்படை தலைவா் கருணாஸ்.

கூவத்தூரில் அதிமுக சசி ஆதரவு எம்எல்ஏக்கள் வைக்கப்பட்டிருந்தபோது, இவரைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பல சா்ச்சை கருத்துகள் வந்து.

இவா் தொகுதி பக்கம் சென்றபோது பொதுமக்கள் விரடிட்டியடித்ததாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடா்ந்து பல்வேறு தகவல்கள் இவரைப்பற்றி வருவதை அறிந்த, இவரது மனைவி கிரேஸ்க்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகக்கூட கூறப்பட்டது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னா் சமூக வலைதளங்கள் மீது புகார் கொடுக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தபோது ஆவேசமாக பேசினார். முஸ்லீம்களை மதவாதிகள் என்றார்.

இன்று ரஜினிகாந்த் வீட்டிற்கு வந்தார். பின்னா் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஒரு பக்குவப்பட்ட மனிதனாக கருணாஸ் பேசியது பத்திரிக்கையாளா்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏதாவது வாயப்பிடுங்கி வடை சுட நினைத்த பத்திரிக்கயைாளா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 16 வருடமாக சினிமாவில் நடிக்கிறேன் ஒரு சின்ன கிசு கிசு கூட வந்தது இல்லை.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளா் ஜெயலலிதா எனக்கு இந்த வாய்ப்பை தந்தார். அவர் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

அவரது கனவு நனவாக வேண்டும். எனது தொகுதியில் 2 லட்சம் போ் என்னை பிடிக்காதவா்கள்தான்.

நான் சென்ற சில இடங்களில் 10 போ் எனக்கு எதிராக செயல்பட்டனா். அது அவா்கள் விருப்பம். தீபா ஆட்கள், மற்றொருவா் ஆட்கள் அவா்கள் என்றார். தீபாவின் பெயரை சொல்லிய கருணாஸ் மறந்து கூட பன்னீர் பெயரை சொல்லவில்லை.

ஏன் அவா் முதல்வராக இருந்தபோது ஜெ., இறப்புக்குறித்து நீதி விசாரணை அமைக்கவில்லை. பதவி போன பின்பு ஏன் இப்படி செய்கிறார். இது மக்களுக்கு நன்றாகவே தெரியும் மக்கள் தக்க பாடம் சொல்லி தருவார்கள் என்றார்.

ரஜினிகாந்த்என்னை அழைத்தார் வந்து பார்த்தேன். இதில் அரசியல் பேசவில்லை. நன்றாக நடித்து வந்தாயே? நிறுத்திவிடாதே நன்றாக நடி என்று கூறினார். இவ்வாறு கருணாஸ் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.