March 26, 2017
லீக்’ ஆன ஆபாச ஆடியோ! ச்சீ.. அமைச்சரா இப்படி!
கேரளாவில் போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள சசீந்திரன் நான்கு முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
தற்போது இவர் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக தொலைபேசியில் பேசியுள்ளார். அவர் பேசிய ஆடியோவை கேரளாவில் உள்ள மங்களம் தொலைக்காட்சி சேனல் இன்று வெளியிட்டுள்ளது.
அமைச்சர் இந்த ஆபாசமான பேச்சு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மங்களம் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அந்த ஆபாச ஆடியோவில், அமைச்சர் சசீந்திரன் மிகவும் அருவருப்பாகவும், பெண்ணிடம் கொச்சையாகவும் பேசியிருக்கிறார்.
மேலும் அமைச்சரின் இந்த ஆபாச ஆடியோவை நாங்கள் எடிட் செய்யாமல் வெளியிட்டுள்ளோம். ஒரு மாநிலத்தில் மந்திரியே இப்படி அசிங்கமாக பேசியிருக்கிறார்.
இது கண்டிக்கத்தக்க வேண்டியது. எனவே அனைவரும் அறியவே நாங்கள் இவ்வாறு வெளியிட்டிருக்கிறோம் என்று தொலைக்காட்சி நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்நிலையில் ஆபாச ஆடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அமைச்சர் சசீந்திரன் அறிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
லீக்’ ஆன ஆபாச ஆடியோ! ச்சீ.. அமைச்சரா இப்படி!
Reviewed by மறத்தமிழன்
on
March 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.