Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 27, 2017

ரஜினிக்கு ஆதரவாக யாழ் நல்லூரில் ஆர்ப்பாட்டம்.. திரண்ட லைக்கா ஆதரவு தமிழர்கள்


கலைஞர்களை கலைஞர்களாக பாருங்கள் அவர்களை அரசியல் வாதிகளாக பார்க்காதீர்கள் என நல்லூரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று(27) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.

ஈழத்துக் கலைஞர் கள் என்று தம்மை அடையாளப் படுத்திக் கொண்ட சிலரினால் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பிரபல தென்னிந்திய நடிகத் சூப்பர் ஸ்டார்  ரஜனிகாந் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த நிலையில் தென்னிந்திய அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக ரஜனிகாந்தின் வரவு அவராலேயே நிறுத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே மேற்படி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தொரிவிக்கப்படுகின்றது.

“திருமாவளவன், வேல்முருகனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” என்ற தலைப்பில் மேற்படி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது திருமாவளவா., வேல்முருகா... ஈழத்தமிழனை வைத்து பிழைப்பு நடத்தாதே,சுயநலவாதிகளே ஈழத்தமிழனின் விடயத்தில் தலையிடாதே,கலைஞர்களை கலைஞர்களாக வாழவிடு,எமது தலைவன் எம்மைக் காண்பதை தடுக்க நீங்கள் யார்?,மஹிந்தாவுக்கு கரம்கொடுத்த உங்களுக்கு தலைவனைத் தடுக்க என்ன தகுதி? போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.