Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 3, 2017

அட அப்படியா நெஜமாவா? உண்மையாவா நம்பவே முடியலிங்க?


இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித்தேர்தல் முடிவுகள் தெரியும் வரை தமிழக சிறைக்கு மாற்ற எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என சின்னம்மா உத்தரவாம். இதைக்கூறிய சின்னம்மாவை சிறையில் கண்ட நால்வர் அணி கண்ணீர் சிந்த விடைபெற்று வந்தனராம் !
மலைக்கோட்டை மாநகரில் சினிமா பாடலாசிரியர் பெயரைக்கொண்ட உளவுத்துறை அதிகாரி அவர். சமீபத்தில் வீடு ஒன்றை கட்டி கிரகப்பிரவேசம் செய்தாராம். உலக அதிசயம் எண்ணிக்கை கொண்ட ஆய்வாளர்களை மட்டுமே அழைத்தாராம். அவர்கள் இவரின் அடிப்பொடிகள் என்பதோடு கனவு இல்லம் கரைசேர கைக்கொடுத்தவர்களாம்.
இடைத்தேர்தல் நடக்கும் வரைதான் புதிய முதல்வர் பதவி வகிப்பாராம். அதன் பின்னர் மூன்றெழுத்து டி.விக்காரார் வசம் போய் விடுமாம், பதவி. திக் திக்குனு இருக்குப்பா…
தினமும் மலரும் நாளிதழ் பங்குதாரரை மலைக்கோட்டை மாநகரில் கூப்பிட்டு மிரட்டினாராம். அந்த பத்திரிக்கையில் பணியாற்றும் நிருபரின் பெயரைக்கொண்ட மன்னார்குடி மைனர். அதுமுதல் பங்குதாரர் ஃபங்காகிட்டாராம் நெசமாவா ஜி? தற்பொழுது மலைக்கோட்டையின் பதிப்பும் சகோதரர் வசமாம்.
தலைமை உத்தரவை ஏற்று மலைக்கோட்டை மாநகர இலக்கட்சி எம் எல் ஏக்களை வளைக்க முடியாத நிலமை ஏற்றப்படிருக்காம் மீசைக்காரருக்கு. இரண்டு பேர் மந்திரி, இரண்டு பேர் எம்.எல்.ஏன்னு இருக்காங்க யாரைக்கூப்பிட்டாலும் மந்திரி பதவி கேட்டா நான் என்னத்த செய்யுறது என விழிபிதுங்குகிறாராம்..?
முன்னாள் முதல்வருக்கு நெருக்கமாக இருந்த கல்வித்துறை அதிகாரி மீது ஏகப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு கோபம். கொளுத்திப்போட்டதில் அம்மணி வேறு துறைக்கு தூக்கியடிக்கப்படலாமாம்.
டெல்லியில் என்னை ஒருத்தரும் மதிக்க மாட்டேங்கறாங்க. நான் பேசாம எனது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழகம் வரட்டுமா என பீடிகைப்போட்டாராம். சின்னம்மாவிடம் இளையவர், நோ என்றவுடன் வியர்த்து விறுவிறுக்க வெளியேறினாராம்.
நல்லவேளை முதல்வர் பதவி மீது கொண்ட ஆசையால் உள்ளதும் போயிருக்கும் என நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் கார்டனில் இதைக்கவனித்தவர்கள்.
காலம் சென்ற முதல்வரின் கட்சியில் மூன்று பிரிவாக செயல்படுறாங்களாம் மன்னார்குடி வகையறா. தேனி வகையறா, அம்மாவால் பதவி பெற்ற நடுநிலையாளர்கள் எனப்பிரிந்து கிடக்கிறார்களாம்.
அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த அணி எப்படி கூட்டணி அமைத்து வெற்றி பெறுகிறதோ அந்த அணியை ஆதரிக்க நடுநிலையாளர்கள் ரகசிய கூட்டம் போட்டு முடிவெடுத்து விட்டார்களாம்.
அப்போ தீபமானவங்க நிலைமை எனக்கேட்டா அவங்களே அதனாலதான் பிடி கொடுக்காம நழுவுறாங்களாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.