Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 1, 2017

தோழா வருவாயா நெடுவாசல் காக்க...!!! - நிலா பிரியன்


நெடுவாசலில்
இருந்து ஒரு குரல்...!!!

தோழா வருவாயா
நெடுவாசல் காக்க
தோழா தோல் கொடுப்பாயா
நெடுவாசல் காக்க
எழில் கொஞ்சும் நெடுவாசல்
எதிரிகளின் பிடியில்
எதார்தமாய் திரிந்த
மக்கள் எல்லாம் அச்சத்தின் மடியில் ..!!!

விளைவுகளை எண்ணுகையில் விழிகளிலோ கண்ணீர்
விளை நிலங்களை பார்க்கும் போது
வழிகிறது செந்நீர்
விவசாயம் தான்
எங்களின் ஆதாரம்
மாண்டால் மீண்டும் எடுப்போம்
விவசாயாகவே அவதாரம்...!!!

அன்னையின் மடியில்
தவழ்ந்ததை விட -இந்த
மண்ணிண் மடியில்
தவழ்ந்ததே அதிகம்
வீட்டில் நாங்கள்
வசித்ததை விட, வயல் காட்டில்
வாழ்ந்ததே அதிகம்
செருப்பு கூட படாத எங்கள் பூமி
நெருப்பாக போகுது சாமி..!!!???

அரசாங்க சாமிக்கு
எங்கள் அழும்குரல் கேட்குமோ
அரசமர சாமிதான்
அவலம் பார்த்து கண் திறக்குமோ
அல்லும் பகலும்
பாடுபட்டோம் ஆண்டவனே
உமக்கும் படையல் இட்டோம்
மாரி பொய்த்தாலும்
ஏரி ஏய்தாலும், தலையாரிக்கு
வரியா கட்டாமல் விட்டோம்..???

அறிவியலில்
மீத்தேனுக்கு ஆயிரம்
பெயர்கள் இருக்கலாம்
எங்கள் மொழியில் சொன்னால்
அவர்கள் எடுக்கப்போவது
மக்கள்  உயிரைதான்..!!!

அவசரத்துக்கு
கைப்பேசியில் கால் கொடுக்கும் தோழா
நம்
அடிப்படை தேவைக்கு தோல் கொடு தோழா
ஊர்கூடி தேர் இழுத்தால்
சாமிக்கு சந்தோசம்
உணர்வோடு ஒன்று கூடி
போராடினால் பூமிக்கு சந்தோசம் ..!!!

 நிலா பிரியன்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.